--- --:--:-- --

மேடவாக்கம் பாலத்தின் கீழ் இருக்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை..!

8

மேடவாக்கம் பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதி மேம்பாலத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சாலைக்கு நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

இதனால் வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே தினகரன் என்ற சமூக ஆர்வலர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon