--- --:--:-- --

14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம்

3

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி வரை காலையில் பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல்லில் மிதமான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல்லில் லேசான பனிமூட்டமும் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

நாளை மறுதினமும், சனிக்கிழமையும் தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Right Menu Icon