--- --:--:-- --

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது ஸ்டாலின் தான்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

7

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை திமுக ஆதரித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மாநில சுயாட்சிக்காக கலைஞரும் ஜெயலலிதாவும் இறுதிவரை குரல் கொடுத்ததாக கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மாறும்போது தென் மாநிலங்களின் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

 

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது முதல்வர் ஸ்டாலின் தான் என்றும், அதை வரவேற்பதாகவும் கூறினார். “நியாயமான மறுவரையறையை விட சில காலம் அதை ஒத்திவைப்பதே சரி” என்றும், தென் மாநிலங்களில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பிரேமலதா, 50 சதவீதம் எண்ணிக்கை உயர்ந்தால் பலன் கிடைக்கும் என்றாலும், 5-6 இந்தி பேசும் மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை தேர்வு செய்யும் நிலை உருவாகும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon