--- --:--:-- --

விஜய் மல்லையாவை தற்போது நாடு கடத்த முடியாது..!

4

ட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜான் தாம்சன் கூறுகையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் சில சட்ட பிரச்சினைகள் உள்ளன என்றார். அவை ரகசியமானவை என்பதால் விரிவாக கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

 

விஜய் மல்லையாவை நாடு கடத்த எவ்வளவு காலம் ஆகும் என்று கணிக்க முடியாது என்றும் இருப்பினும் கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

விஜய் மல்லையாவை நாடு கடத்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Right Menu Icon