--- --:--:-- --

பெரியபாளையம் அமோனியா வாயு கசிவு: தீவிரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்

9

பெரியபாளையம் அமோனியா வாயு கசிவு: தீவிரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தைத் தொடர்ந்து, அங்குள்ள டேங்கர்களில் இருந்து மீதமுள்ள அமோனியா வாயுவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ”அப்பகுதியில் உள்ள 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் குடியிருப்புகள் ஏதுமில்லாததால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காவல் துறை, தீயணைப்புத் துறை, என்.டி.ஆர்.எஃப் (NDRF) என சுமார் 100 முதல் 150 பேர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

எதிர்கால நடவடிக்கை: தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாயு அகற்றும் பணி முடிந்ததும், இப்பகுதியிலுள்ள பிற அமோனியா தொடர்பான தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆலை தற்காலிகமாக சீல் வைக்கப்படும் என்றும், நிரந்தர மூடல் குறித்து சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்” என்றார்.

Leave a Reply

Right Menu Icon