--- --:--:-- --

ராட்சத மலைப் பாம்பிடம் ஜாலியாக விளையாடிய நபரின் வீடியோ வைரல்..!

7

ணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பலவித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன.

 

சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் பாம்பு தரையில் ஊர்வதை கண்டாலே திக்குமுக்கு தெரியாமல் ஓடிவிடுவோம். அது விஷப் பாம்பாக இருந்தாலும் சரி, விஷமற்ற பாம்பாக இருந்தாலும் சரி. அப்படியிருக்க சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் 2ராட்சத மலைப்பாம்புகளையும் ஒரு நபரையும் காணமுடிகிறது.

 

இதில் காணும் காட்சியை பார்த்தால் நிச்சயமாக நம்ப முடியாது. கொண்ட இந்த வீடியோ பதிவில் ஒரு நபர் வீட்டின் பின்பக்க சுவரில் சாய்ந்து படுத்து இருக்கிறார். அவரிடம் திடீரென 20 அடி நீளமுள்ள இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் வருகின்றன.

 

இவ்வளவு பெரிய மலை பாம்புகள் தன் அருகில் வருவதை பார்த்து அவன் சிறிதும் பயப்படாமல் அவற்றுடன் விளையாட தொடங்குகிறார். ஆச்சரியம் என்னவென்றால் பாம்புகளும் அவரை தொந்தரவு செய்யவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon