ஆசை வார்த்தை கூறி மாணவியை ஏமாற்றிய ஆசிரியர் கைது..!
பழனி அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமரபூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் நந்தவன பட்டியை சேர்ந்த நாட்ராயன்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்புமாணவியுடன் கடந்த ஓராண்டு காலமாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே உடனடியாக அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதிலிருந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.







