--- --:--:-- --

மின்னல் தாக்கிய விமான விபத்தின் வீடியோ வைரல்!

14

ரஷ்யாவில் கடந்த ஆண்டு மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து விழுந்த விமானத்தின் புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள விமான நிலையத்தில் விமானம் ஒன்று மின்னலால் தாக்கப்பட்டு பாதிப்படைந்து ஓடுதளத்தில் நெருப்புடன் விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்தாண்டு நடந்த இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

 

மேலும் ஏராளமான பயணிகள் படுகாயமடைந்தனர். மீதமுள்ள பயணிகள் அவசர வழி மூலம் இறக்கி விடப்பட்டனர். இது தொடர்பாக ரஷ்ய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் மின்னல் தாக்கியது தெரிந்தும் விமானி அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மேலும் விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து விபத்து குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon