மக்கள் தொகை கணக்கெடுப்பு: தேசிய பொறுப்பாக கருத வேண்டும்: ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும், இதனை ஒரு தேசிய பொறுப்பாகக் கருத வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று தொடங்கியுள்ள சுய விவர கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






