மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் தங்கம் விலை..!
ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை காலை மாலை என 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர் சரிவை கண்டது. தொடர்ச்சியாக ஜூலை மாதத்தில் அடிக்கடி தங்கம் விலை சரிவை கண்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று ஜூலை ( 17) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.104,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.10,920க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.87,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






