டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் மருத்துவமனயைில் அனுமதி..!
NEET தேர்வு முறைகேடு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்-கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் போராட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி வினாத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதம் போரட்டம் மேற்கொண்டு வருகிறார்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் உடல் எடை 9 கிலோ குறைந்த நிலையில் போராட்டத்தை கைவிட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவரது உடல்நிலையை கண்காணிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. மருத்துவரின் முடிவு அடிப்படையில் உண்ணாவிரத விவகாரத்தில் தலையிடுவோம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல் நிலை இன்று காலை மோசமனதால் அவரை டெல்லி காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். சோனம் வாங்சுக்கை உண்ணாவிரத இடத்தில் இருந்து போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.






