--- --:--:-- --

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கூடாது.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தங்கர்பச்சான்..!

3

க்களின் எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தால் பாமக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என இயக்குனரும் கடலூர் தொகுதி பாமக வேட்பாளருமான தங்கர்பச்சான் எச்சரித்துள்ளார்.

 

வள்ளலார் சத்திய ஞான சபைக்கு நிலம் வழங்கிய கிராம மக்களை சந்தித்து பேசிய பொழுது கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் தெரிவித்தார். வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து பாமக தங்கர் மச்சான் ஆலோசனை நடத்தினார்.

 

அப்பொழுது பேசியவர் தமிழ்நாடு அரசு அனைவரின் எதிர்ப்பையும் மீறி சர்வதேச மையம் அமைப்பதாக குற்றம் சாட்டினார். மக்களின் எதிர்ப்பை மீறி கட்டுமான பணிகள் நடத்தினால் மக்கள் ஆதரவோடு பாமக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் அவரை எச்சரித்தார்.

 

மேலும் வள்ளலார் சாத்திய ஞான சபை வழங்கப்பட்ட நாற்பது ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு சர்வதேச மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 

Right Menu Icon