அல்லதை செய்தால் கண்டிப்போம் – த.வெ.க அரசு குறித்து சு.வெங்கடேசன் பேச்சு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். புதிய அரசுக்குக் கொஞ்சம் காலம் தர வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அரசு நல்லது செய்தால் வரவேற்போம் என்றும், அல்லதை (தவறானதை) செய்தால் கண்டிப்பாகக் கண்டிப்போம் என்றும், தேவையான விஷயங்களில் ஏற்கனவே கண்டித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சி.பி.எஸ்.இ மாணவர்களின் படிப்பில் ஒன்றிய அரசு மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், அதற்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





