--- --:--:-- --

வரதட்சணை தொல்லை தாங்க முடியாமல் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

5

ன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வரதட்சனை கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரது மாமியாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

கார்த்திக் – சுமதி தம்பதிக்கு ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் மாமியாரின் வரதட்சனை கொடுமை தாங்க முடியவில்லை என வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு கடந்த 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனால் போலீஸ் தன்னை கைது செய்து விடுமோ என அஞ்சிய அவரது மாமியார் செண்பகவல்லி சில தினங்களுக்கு முன் விஷமருதி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

 

Right Menu Icon