விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலியான சோகம்..!
அம்பை அருகே தாறுமாறாக வந்த ஆட்டோ மோதி கணவருடன் பைக்கில் சென்ற பெண் பலியானார். நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள எரிக்கால் பகுதியில் சேர்ந்த ஆதிமூலம் ஆதிலட்சுமி தம்பதி பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
செங்குளம் அருகே சென்ற பொழுது பின்னால் வந்த லோடு ஆட்டோ தாறுமாறாக வந்து கவிழ்ந்தது. இந்த நிலையில் ஆதிலட்சுமி பரிதாபமாக பலியானார். தற்பொழுது ஆட்டோ தாறுமாறாக சென்று மோதிக் கவிழும் காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.





