--- --:--:-- --

திருமணத்தை மீறிய உறவால் கடைசியில் நேர்ந்த விபரீதம்..!

2

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் இரட்டை கொலை நிகழ்ந்துள்ளது. பரிமளா என்பவரின் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்த பரிமலாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இதனால் பிள்ளைகளுக்கும் பரிமளாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடுத்து காமராஜ் உடன் பேசுவதை பரிமளா தவிர்த்ததாக தெரிகிறது. இந்நிலையில் 11 வயதான இரண்டாவது மகள் உடன் கோவிலுக்கு சென்ற பரிமளாவை வழிமறித்த காமராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

தடுக்க சென்ற மகளுக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

 

Right Menu Icon