--- --:--:-- --

கோயம்பேடு மார்க்கெட் திறக்க அரசு சம்மதம் : ஆக.10-ந் தேதி நடத்த இருந்த கடையடைப்பு வாபஸ்..! விக்கிரம ராஜா அறிவிப்பு!!

16

கஸ்ட் 10-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை விதித்தது. இதில், ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி | பழ மார்க்கெட்டான சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஆரம்ப காலத்தில் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட ஆரம்பித்ததால், கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் திறந்திருந்ததும் ஒரு காரணம் என புகார் எழுந்தது.

இதனால் கோயம்பேடு மார்க்கெட் திடீரென முற்றிலும் மூடப்பட்டது. திருமழிசைக்கு மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசுத்தரப்பில் சம்மதிக்காததால் தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை (ஆக :10) அனைத்து மார்க்கெட், சந்தைகள், கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், அரசுத் தரப்பில் கோயம்பேடு மார்க்கெட்டை விரைவில் திறக்க அனுமதிக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கடையடைப்பு போராட்டம் வாபஸ் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும் 11-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருவதால், கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon