ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எங்கே இருந்தீர்கள்..? ஜெ.தீபாவுக்கு “குட்டு” வைத்த உயர்நீதிமன்றம்!!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எங்கே இருந்தீர்கள்? என உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசாணையும் பிறப்பித்துள்ளது.
இதனால் அந்த இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகையை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வழங்க 68 கோடி ரூபாயை தமிழக அரசு டெபாசிட்டும் செய்துள்ளது.

ஆனால் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆக்கும் முடிவுக்கு ஜெ. தீபா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது அரசுடைமை ஆக்கப்படுவதாக அரசு அறிவித்ததற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெ. தீபா வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று நீதிபதி சரமாரியாக எழுப்பிய கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் போயஸ் கார்டனை அரசுடைமை ஆக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் அறிவித்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எங்கே இருந்தீர்கள் என ஜெ.தீபாவிடம் உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியதன் மூலம் இந்த வழக்கில் ஜெ. தீபாவுக்கு பின்னடைவு என்றே கூறலாம்.

![]()







