நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை நடைபெற உள்ளது.
இந்தியாவிலும் நாட்டிற்கு வெளியே 14 இடங்களிலும் ஆஃப்லைன் முறையிலும் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி ஒன்பதாம் தேதி இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதையடுத்து மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவேற்றலாம் என தேர்வு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கி, இன்றுடன் முடிவடைகிறது.





