செல்வராஜுக்கு சென்றமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பு!
பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களிடம் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜு வாக்கு சேகரித்தார்.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய 4 நாட்கள் அவகாசம் மட்டுமே இருக்கிறது. குறுகிய அவகாசம் என்பதால், வெயிலை பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளராக முன்னாள் மேயர் செல்வராஜ் போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

செல்வராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், வாலிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். சாலையின் இருபுறமும் இருந்த வாக்காளர்கள் மற்றும் பெண்கள், கையசைத்து, வரவேற்பு தெரிவித்தனர். பல இடங்களில் பெண்கள், தங்கள் தொகுதி வெற்றி வேட்பாளரான செல்வராஜிக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
பிரசாரத்தின் போது பொதுமக்கள் பேசிய திமுக வேட்பாளர் செல்வராஜ், திருப்பூர் தெற்கு தொகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான குடிநீர், தார்சாலை, சாக்கடை கால்வாய், பொதுக் கழிப்பிடம் உள்ளிட்டவை முறையாக செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுரை ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் திருப்பூர் தெற்கு தொகுதியில் என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது, திருப்பூர் நகரின் அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
தெற்கு தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள குடிநீர், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும் எனவும் செல்வராஜ் வாக்குறுதி அளித்தார். வேட்பாளர் செல்வராஜுடன் கூட்டணி கட்சியினர், நிர்வாகிகள் வாகனங்களில் கட்சிக்கொடிகளை கட்டியபடி திரளாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




