--- --:--:-- --

ஈபிஎஸ் தாய் குறித்த பேச்சு… ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தேர்தல்ஆணையம் தடை!

raja 04

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

 

திமுக எம்.பியும். அக்கட்சி துணை பொதுச் செயலாளருமான ஆ,ராசா, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிச்சாமி குறித்து அறுவெறுக்கத்தக்க வகையில் ஒப்புமைப்படுத்தி பேசினார். ”நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் பழனிசாமி. நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறைபிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற டாக்டர் வருகிறார்” என்று ஆ. ராசா கூறி இருந்தார்.

 

இந்த பேச்சு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி ஆர் ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, தேர்தல் ஆணையத்திலும் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே, தான் பேசியதை ஒட்டி வெட்டி திரித்து வெளியிடுகிறார்கள் என்று, ஆ. ராசா முதலில் சாக்குபோக்கு சொன்னார். ஆனால், எதிர்ப்பு மேலும் தீவிரமாகவே, தேர்தல் நேரத்தில் அது திமுகவுக்கு எதிர்வினையாற்றிவிடுமோ என்று ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அஞ்சத் தொடங்கினார். திமுக தலைமையின் நெருக்குதலை தொடர்ந்து, ஆ. ராசா மன்னிப்பு கேட்டார்.

 

தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி தேர்தல் ஆணையத்திற்கு பேக்ஸ் மூலம் விளக்கமளித்த ஆ.ராசா, “பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை. முதல்வர் பற்றி நான் பேசியதை அதிமுக பாஜகவினர் திரித்து பரப்புகின்றனர். முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் திட்டமிட்டு என் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

இந்நிலையில் முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள ஆ.ராசாவிற்கு தேர்தல் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்து விளக்கமளித்தது திருப்தி அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து ஆ.ராசாவின் பெயரை நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் விதிகளை மீறி பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் இனி எச்சரிக்கையுடன் பேசவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon