டிக் டாக் தடை..! டிக் டாக் பிரபலங்களின் கருத்து என்ன?
இந்தியர்களை சீனா கண்காணிக்கலாம் என்பதால் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறும் நிலையில், டிக் டாக் பிரபலங்கள் வரவேற்பும் வருத்தமும் தெரிவிக்கின்றனர். நவீன வளர்ச்சிக்கேற்ப இந்தியாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றது டிக் டாக் செயலி.
ஆபாசம், சாதிய மோதல்களுக்கு வழிவகை, தற்கொலைக்கு தூண்டுதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சர்ச்சையில் சிக்கியது இந்த செயலி. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்களை சீனா கண்காணிக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என ஹெக்கீங் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு டிக்டாக் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த நடவடிக்கை டிக் டாக்கை அதிகம் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் பலரும் வரவேற்பும், டிக் டாக் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்கிறோம் என சிலர் வருத்தத்துடனும் பதிவிட்டு வருகின்றனர். டிக் டாக் செயலி பொழுதுபோக்கிற்கான ஒரு கருவியாக இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.






