குற்ற வழக்கில் கைதானால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது – ஐகோர்ட்
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மேற்கோள் காட்டிய தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம் ஹரிநாடாரின் மனுவை தள்ளுபடி செய்தது





