--- --:--:-- --

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு..!

1

ட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

 

234 தொகுதிகளைச் சேர்த்து, 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதாகவும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். 83 ஆயிரத்து 875 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாகவும், 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் ஆயிரத்து 262 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். செல்போன்களை வாக்குச்சாவடி மையத்திற்கு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும், வெளியை வைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Leave a Reply

Right Menu Icon