வாக்குச்சாவடி விவரங்கள் அறிந்து கொள்வது எப்படி?
ECINET, Votershelpline, Sweetha செயலிகள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பு, வாக்குச்சாவடி எங்கு உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுவீடாக தரப்படும் வாக்காளர் தகவல் சீட்டிலும் (பூத் சிலிப்) வாக்களிக்கத் தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும்.
இந்த அனைத்து விவரங்களையும் அறிந்த பின்பு வாக்குச்சாவடிக்கு சென்றால் எளிதாக வாக்களித்துவிட்டு வரலாம். https://electoralsearch.eci.gov.in இணைய முகவரி, Voter Helpline App அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்னை பயன்படுத்தி தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை.






