தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்தார்.
நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், புவியரசன் குறிப்பிட்டார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.





