கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது! திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி!!
கொரோனா தொற்று 2 வது அலையின் போது திருப்பூர் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது இந்நிலையில் கடந்த சில தினங்களாக தாள் ஒன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்து வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது அலையை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்தவகையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர போலீஸ் சார்பில் தொழில் துறையினருக்கான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் மாநகர போலீஸ்கமிணனர் வனிதா தொழில்துறை சார்ந்த சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய மாநராட்சி கமிசஷனர் கிராந்தி குமார் தொழில்துறையினர் தங்கள் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நோய்த்தொற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதில் போலீசாரின் பங்களிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக பேசினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா திருப்பூரில் இனி வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவார்கள் எனப்பேசிய கமிஷனர் வனிதா பல்வேறு 3வது அலையை தடுப்பதற்கான முன்நேற்பாடுகளில் தொழில் துறையினர் சுகாதாரத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் தொழில் துறையினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளம்பர ஆட்டோக்களை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா கொடியசைத்து துவக்கிவைத்தார் இந்த ஆட்டோக்கள் மூலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படவுள்ளது.






