திருப்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளருக்கு விரோத போக்கில் செயல்பட்டுவரும் ஒன்றிய பிஜேபி மோடி அரசு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் செயலை எதிர்த்தும், புதிய மின்சார சட்டங்களை திரும்பபெற கோரியும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும் திருப்பூரில் இன்று மாலை 05 .00 மணி அளவில் திருப்பூர் இரயில் நிலையம் அருகிலுள்ள குமரன்சிலை முன்பு எச்.எம்.எஸ் செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் எல்.பி.எப் மாவட்ட கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி.அ.சரவணன், ஏஐடியுசி மாவட்ட பொதுசெயலாளர் என், சேகர் ,சிஐடியு மாவட்ட பொதுசெயலாளர் ரங்கராஜன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் சிவசாமி, எம்எல்எப் மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






