மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள்..!
மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கருவை குளம் பகுதியில் சேர்ந்த மைக்கேல் பாக்யராஜ் என்பவரது படைக்கில் 12 மீனவர்கள் கடந்த 1ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். கடந்த 20ம் தேதி திசை மாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் அவர்களது படகு சென்றுள்ளது.
இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட செயலை அறிந்து அவர்கள் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





