இது பெண்கள் வார்டு வெளியே போங்க என மாறி மாறி தாக்கி கொண்ட நோயாளிகள்..!
வேலூரில் சுபா என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் முதல் 7 நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள பேரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண்கள் சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை இவரை காண ஆண் உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் சுபாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நண்பரை இது பெண்களுக்கான வார்டு என்றும் இதிலிருந்து வெளியேறும்படி கூறியுள்ளார்.
அதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை பார்த்த நோயாளி சுபா இருவரை தடுக்க முயன்ற பொழுது மருத்துவர் சுபாவை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுபா மருத்துவரை தாக்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தாலுகா போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





