--- --:--:-- --

பன்னீர்செல்வம் இனி அதிமுகவில் இணைய ஒரு விழுக்காடு கூட வாய்ப்பில்லை..!

2

ன்னீர்செல்வம் இனி அதிமுகவில் இணைய ஒரு விழுக்காடு கூட வாய்ப்பில்லை என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 100 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது,

 

விழாவில் கொடி ஏற்றிய பின் உரையாற்றிய பழனிசாமி அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஏராளமான தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டதாக கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியையும் , ஆட்சியையும் நடத்த முடியாமல் திணறுவதாக அவர் விமர்சித்தார்.

 

அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கு பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட பழனிசாமி ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி அவரது கட்சியை அழிக்கவே முற்பட்டதாக குற்றம் சாட்டினார். அதன் காரணமாகவே பன்னீர்செல்வம் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon