--- --:--:-- --

தஞ்சை பெரிய கோயில் அருகே கட்டப்படும் திரையரங்கம்..!

1

ஞ்சை பெரிய கோயில் அருகே கட்டப்படும் திரையரங்க பணிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கீழடி ஆதிச்சநல்லூர் போல தஞ்சையிலும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் தஞ்சை மக்கள்.

 

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு அலங்கம் பகுதியில் இருந்த திருவள்ளுவர் திரையரங்கம் இடிக்கப்பட்ட அங்கு திரையரங்கு துடன் கூடிய வணிக வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

 

இந்த இடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரிய கோவிலில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஏற்கனவே திரையரங்கம் இருந்த இடம் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்ட அகழி பகுதி என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இந்த இடத்தில் மீண்டும் திரையரங்கள் கட்டுவதற்கு பதிலாக அகழியை மேல் உருவாக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் தஞ்சை மக்கள்.

 

இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது திருவள்ளுவர் திரையரங்கம் ஏற்கனவே இருந்த உயரத்தில் இருக்கும்படி திட்டமிடப்பட்டு மீண்டும் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

 

தொல்லியல் துறையிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறிய ஆணையர் தொல்லியல்துறை அறிவுறுத்தலின்படி பெரிய கோவிலில் இருந்து 300 மீட்டருக்குள் திரையரங்கம் வரவில்லை என்றும் கோவிலிலிருந்து 309 மீட்டரில் தான் திரையரங்கம் வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon