தங்கச் செயினை பாலிஷ் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தங்க நகைக்கு பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று வட மாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நல்லமாநாயக்கன்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கையில் ரசாயன பொடியை தடவி நான்கு சவரன் தங்கச் சங்கலியை பாலிஷ் செய்வது போல் ஒன்றேகால் செயினை சுரண்டி எடுத்ததாக கூறப்படுகிறது.





