--- --:--:-- --

வாக்காளர்களுக்கு ரூ.8000 கூப்பன் விநியோகம்: தி.மு.க மீது வழக்குப்பதிவு

8

மிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 

அதில், “தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஆளுங்கட்சியான திமுகவினர் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் சுமார் 8,000 ரூபாய் மதிப்பிலான வணிக வளாகக் கூப்பன்களை விநியோகித்து வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கூப்பன் விநியோகம் தொடர்பாகக் கூறப்பட்ட புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தி.மு.க-வினர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட கட்சிக்கு (திமுக) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

 

தேர்தல் ஆணையத்தின் இந்தத் தகவலைப் பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், அ.தி.மு.க வழக்கறிஞர் அணி செயலர் செந்தில்வேல் தொடர்ந்த இந்த வழக்கைத் தீர்த்து வைத்து உத்தரவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon