--- --:--:-- --

மனைவி கண் முன்னே கணவனை வெட்டி வீசிய நபர்..!

10

பொள்ளாச்சி அருகே கணவன் – மனைவிக்கு இடையேயான தகராறை தடுக்க சென்ற இளைஞர் பெண்ணின் கணவரை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயியான இவர் அவரது மனைவி சரஸ்வதியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தை பிரிப்பதில் இருவரும் ஓடி வந்ததாகவும் சம்பவத்தன்று சரஸ்வதி தோட்டத்திற்கு வந்த பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

அப்பொழுது பக்கத்து தோட்டக்காரரான சிவகுமார் என்பவர் தகராறை விலக்க சென்ற நிலையில் அவரை இராதாகிருஷ்ணன் அரிவாளால் வெட்ட முயன்றதாக சொல்லப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே கைகலப்பாகியதையடுத்து ராதாகிருஷ்ணனை சிவகுமார் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விவசாயியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon