பரப்புரை ஓய்ந்தபின் என்னென்ன கட்டுப்பாடுகள்?
இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை ‘அமைதி காலம்’ கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில்: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி, வானொலி, இணையம், வாட்ஸ்அப் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் தொடர்பான பரப்புரைகளைச் செய்யக்கூடாது. விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். -தேர்தல் ஆணையம்






