உற்சாகத்தில் தன்னை தானே குத்திக் கொண்ட இளைஞர்..!
ஹோலி கொண்டாட்டங்களின் பொழுது நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உற்சாகத்தில் கத்தியை வைத்து தன்னைத் தானே குத்திக் கொண்டதையடுத்து அவர் உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஹோலி கொண்டாட்டத்தில் பாடலுக்கு ஏற்ற நடனமாடிக் கொண்டிருந்த ஒருவர் உற்சாக மிகுதியில் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து தன்னுடைய நெஞ்சிலே நான்குமுறை கொத்திக் கொண்டார்.
முதலில் கத்தி நெஞ்சில் இறங்கியதை அறியாத அந்த இளைஞர் வலி ஏற்பட்டு ரத்தம் கசிந்த பின்பே தன்னைத்தானே சுற்றிக் கொண்டதை உணர்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.





