நாமக்கலில் வாய்க்காலில் ஒருபுறம் குதித்து மறுபுறம் வருவதாக பந்தயம் கட்டிய இளைஞன்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மது போதையில் வாய்க்காலில் ஒரு பகுதியில் இருந்த மறுமுனைக்கு வருவதாக பந்தயம் கட்டிய கூலி தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இங்குள்ள வெப்படை என்ற பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி கார்த்தி என்பவர் குட்டை கால்வாய் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தினார்.
100 மீட்டர் நீளம் கொண்ட தொட்டி வாய்க்காலில் ஒரு புறம் நுழைந்த கார்த்தி ஒரு மணி நேரம் ஆகியும் மறு முனைக்கு வந்து சேராததால் உடன் இருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் கடுமையாக போராடி கார்த்தியின் சடலத்தை மீட்டனர்.






