தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற இளைஞர்..!
புதுக்கோட்டை மாவட்டம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோனார்பட்டு கிராமத்தை சேர்ந்த வசந்தா என்ற பெண் வீட்டில் தனிதனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகுமார் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பு வசந்தா வீட்டிற்கு சிசிடிவி பொருத்த சென்றதும் அப்போது அவர் தனியாக வாசித்ததை தெரிந்து கொண்டதால் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.





