--- --:--:-- --

தனக்கு கொரொனா என்றும், ஆனால் சுகாதாரத்துறை அழைத்து செல்லவில்லை என வீடியோ வெளியிட்ட பெண்..!

31

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்தியதாக வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் இதுகுறித்து சமூக வளைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

 

அதில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தும் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வரவில்லை எனக் கூறியிருந்தார். இதனால் தலை வலி மற்றும் தொண்டை வலியால் அவதிப்படுவதாகவும் மருந்து வாங்க வெளியே செல்ல முடியவில்லை உதவிக்கு ஆட்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் அவரை இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். தனியார் ஆய்வகத்தில் அந்த பெண் சோதனை மேற்கொண்டதால் பாதிக்கப்பட்டவர் விவரங்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டதாகவும் விவரம் தெரிந்த உடனேயே இரவு அவரை சந்தித்து மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக அவரிடம் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிக்கவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon