--- --:--:-- --

தாய்க்கு உதவுவது போல் நடித்து குழந்தையை கடத்தி சென்ற பெண்..!

1

ஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

 

பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு உதவி செய்ய மருத்துவமனைக்கு யாரும் வரவில்லை. இதனை அறிந்து கொண்டு அங்கிருந்த பெண் ஒருவர் ராஜலட்சுமியை கவனித்துக் கொள்வதை போல் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் காலை ராஜலட்சுமி கழிவறைக்கு சென்று வந்தபோது அவரின் கணவரை கடைக்கு அனுப்பிய அந்த பெண் குழந்தையை கட்டைபை ஒன்றில் வைத்துக்கொண்டு திருடிச் சென்றது தெரியவந்தது.

 

இதுகுறித்த புகாரின் விசாரணையை தொடங்கிய காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Right Menu Icon