--- --:--:-- --

வயிற்றில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்..!

2

துரை விமானநிலையத்தில் அயன் பட பாணியில் வயிற்றில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு நேற்று காலை 9.20 மணி அளவில் துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் 156 பயணிகள் வந்தனர்.

 

விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது 2 பேர் வயிற்றுக்குள் பெருங்குடல் பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அஜித்குமாரின் 971 கிராம் தங்கமும் பாலகுமாரிடம் இருந்து 220 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon