--- --:--:-- --

வரும் நாட்களில் அரிசி விலை மேலும் உயரும்!

5

மிழ்நாட்டில் இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது.

 

 

அதே வேளையில், தமிழகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடையாகும் நெல், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைக்காக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பாபட்லா, கர்நாடகப் பொன்னி ரகங்கள் பெறப்படுகின்றன.

 

 

தமிழ்நாட்டில் நிலவும் நெல் தட்டுப்பாட்டால் அரிசி ஆலைகள் அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் நேரடியாக அரிசி விலையிலும் பிரதிபலித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

 

 

குறிப்பாக, கர்நாடகா பொன்னி, சன்ன ரக மற்றும் சில பாசுமதி அரிசி வகைகளின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

அரிசி விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிரியாணி கடைகளுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அச்சமூட்டும் அரிசி விலையால், வரவு, செலவை திட்டமிட்டு வாழும் ஏழை, நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon