ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்து பேட்டி..!
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீட விருது தனக்குக் கிடைத்திருப்பது தமிழுக்குக் கிடைத்த தாமதமான பெருமை என மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
செம்மொழியான தமிழுக்கு இதுவரை மூன்று முறை மட்டுமே இந்த விருது கிடைத்திருப்பது தமிழ்நாட்டிற்குக் குறை என்று கூறிய அவர், இந்த விருதை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் காணிக்கையாக்குவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் குறிக்கோள் என்றும், தாய் தமிழக எல்லைக்குள் இந்த உரிமையைப் பெற்றுத் தந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நன்றியுடன் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






