இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் தான்: அமைச்சர் ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி முழுமையாக ஆன்லைன் முறையில்தான் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், டெண்டர் தொடர்பான அனைத்து செயல்முறைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், டெண்டர் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.






