--- --:--:-- --

சேர்ந்து வாழ மறுத்த மனைவி.. உயிரை விட்ட கணவன்..!

3

பிரிந்து சென்ற காதல் மனைவியிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த வழக்கறிஞர் அழைப்பை துண்டித்த அடுத்த கணமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ்.

 

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் நந்தினி என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மனைவியை பலமுறை செல்போனில் அழைத்து சதீஷ் சமாதானம் பேசியதாகவும் தன்னுடன் சேர்ந்து வாழ விரும்பும் வருமாறு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

 

இதனிடையே சம்பவத்தன்று மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய சதீஷ் கால் இணைப்பை துண்டித்து அடுத்த கணமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதனிடையே மனைவி நகைகளை அடமானம் வைத்து சதீஷ் ஆன்லைனில் கேம் விளையாடியதாகவும் இதனால் அவர் இழந்த 14 லட்சம் ரூபாய் பணத்தை தான் செலுத்தியதாகவும் கூறிய சதீஷின் தந்தை குடும்பத் தகராறில் தன் மகனை நந்தினியின் தந்தை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon