இணையத்தில் வைரலாகும் ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்ச் ! ஆபத்து!
இணையத்தில் வைரலாகி வரும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்கல்-பிரேக்கர் என்ற சேலஞ்சில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு பேர் இரு பக்க வாட்டில் நின்று கொண்டு நடுவில் நிற்பவரின் கால்களை கீழே தட்டி விட்டு அவர் தரையில் நிலைகுலைந்து விழுவதே இந்த சேலஞ்ச் ஆகும். இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது தலையின் பின்புறம் பாதிக்கப்படுவதோடு எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.





