விமான எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த நிதி..!
மத்திய கிழக்கு போரால் விமான எரிபொருள் விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதி உதவி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நிறுவனங்களுக்கு வட்டி இல்லாத முன்பணமாக இந்த நிதி வழங்கப்படும்





