தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதோடு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியானது இத்தொகுதி மறுவரையறை மசோதாவை மக்களவையில் தடுத்து நிறுத்தியிருந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளதாகக் கூறப்படும் சூழலில், தேசிய அளவிலான இந்தியா கூட்டணியில் திமுக நீடிக்குமா என்ற பலத்த கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.





