--- --:--:-- --

கார்த்திக் சிதம்பரம் மனைவி பரப்புரையின் போது ஏற்பட்ட சலசலப்பு..!

6

மானாமதுரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி பரப்பரைக்காக புறப்பட்ட பொழுது தேர்தல் அதிகாரிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிட உள்ளார்.

 

அவருக்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி பல்வேறு பகுதிகளிலும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் மக்களிடம் ஆதரவு கேட்பதற்காக மானாமதுரை, கிருஷ்ணகிரி சென்றார்.

 

அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவர் பரப்புரைக்காக புறப்பட்ட பொழுது திடீரென வந்த பேருந்தில் அதிகாரிகள் ஸ்ரீநிதியிடம் பரப்புரை தொடர்பான அனுமதி கடிதத்தை கேட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon